ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண் மற்றும் ஐரிஷ் ஸ்கேன், கைரேகை போன்ற ஒரு தனிநபரின் பயோமெட்ரிக் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. DOB மற்றும் வீட்டு முகவரி போன்ற புள்ளிவிவர தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஆதார் புதுப்பிப்பது பல ஆன்லைன் சேவைகளுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல் அவசியம். ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் எப்போதுமே அப்டேட்டாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஆதாரில் உள்ள மற்ற விஷயங்களை அப்டேட் செய்வதற்கு மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும் ஓடிபி நம்பர் மிகவும் அவசியமானதாகும்.
எனவே ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் எப்போதும் கையில் இருக்க வேண்டும். ஒருவேளை மொபைல் நம்பர் மாறியிருந்தால் அதை உடனடியாக ஆதார் கார்டுலையும் மாற்ற வேண்டும். ஆதாரில் மொபைல் நம்பர் மாற்றுவதற்கு ஆன்லைன் மூலமாக அப்பாயிண்ட்மெண்ட் புக்கிங் செய்யலாம். அதற்கு https://uidai.gov.in/. என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் கேட்கப்படும் கேள்விகளை பூர்த்தி செய்தால் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் குறிப்பிட்ட ஒருநாளில் அப்பாயின்மென்ட் கிடைக்கும். அந்த நாளில் சேவை மையத்துக்குச் சென்று கைரேகை பதிவு எடுக்கப்பட்டு புதிய மொபைல் நம்பர் அப்டேட் செய்ய முடியும். மொபைல் நம்பர் அப்டேட் செய்வதற்கு 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.