Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு அலர்ட்.. உங்க பேங்க் அக்கவுண்டுக்கு ஆபத்தா?

நம்முடைய ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு வங்கி கணக்கை முடக்க முடியுமா என்பது குறித்து ஆதார ஆணையம் விளக்கம் தருகின்றது.

இந்திய குடிமகனுக்கு ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கிய ஆவணமாக பயன்பட்டு வருகின்றது. வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமாக பயன்படுகின்றது. ஆதார் ஆணையத்தால் விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டு வங்கிகளில் முக்கிய சேவைகளை பெறுவதற்கு வங்கி கணக்குடன் இணைக்க வேண்டியது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் எண்ணை மட்டும் வைத்து சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கை முடக்கி பணத்தை திருட முடியுமா? என சமூக வலைத்தளங்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு ஆதார் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு வங்கி கணக்கை முடக்க முடியாது என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆதார ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்திலும் ஏடிஎம் கார்டு எண் மட்டும் வைத்துக்கொண்டு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து விட முடியாது. அதே போல வெறும் ஆதார் கார்ட் எண் மட்டும் வைத்துக்கொண்டு வங்கி கணக்கை முடக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |