இந்தியாவில் ஆதார் அட்டை என்பது தனிமனித அடையாளமாக உள்ளது. இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவ்வாறு முக்கியமான ஆதார் கார்டை எப்போதும் நாம் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அதாவது ஆதார் கார்டில் பெயர் முகவரி உள்ளிட்ட தவறுகள் இருக்கும். எனவே ஆதார் கார்டில் உள்ள தவறுகளை உடனடியாக அப்டேட் செய்து விட வேண்டும். இதற்கு நீங்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதில் வேலையை முடிக்கலாம். ஆனால் ஒரு சில அப்டேட்டுகளுக்கு மட்டும் நீங்கள் ஆதார் சேவை மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அதற்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி செல்வது மிகவும் நல்லது. நீங்கள் ஆன்லைன் மூலமாக எளிதில் அப்பாயிண்ட்மெண்ட் புக்கிங் செய்ய முடியும். வீட்டிலிருந்த கொண்டே ஒரு அப்பாயிண்ட்மெண்டை எளிதில் பதிவு செய்யலாம்.இதன் மூலமாக நீங்கள் ஆதார் சேவை மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஆன்லைன் மூலமாக அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு https://uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் ‘my aadhaar’ என்பதை கிளிக் செய்து ‘Book an appointment’ என்ற வசதியை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் உங்கள் நகரம் மற்றும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் ’proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்னர் எண்ணைப் பதிவிட்டு ‘New aadhaar’ அல்லது ‘aadhaar update’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, ’Generate OTP’ என்பதை கிளிக் செய்யவும்.
மொபைல் நம்பருக்கு வரும் OTP நம்பரைப் பதிவிட்டு ‘verify’ என்பதை கிளிக் செய்யவும்.
ஆவணங்களுடன் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரி விவரங்களை உள்ளிட வேண்டும்.
எந்த நாள் – எந்த நேரம் என்பதைத் தேர்ந்தெடுத்து ’next’ என்பதை கிளிக் செய்தால் அப்பாயிண்ட்மெண்ட் புக் ஆகிவிடும். அந்த தேதியில் சென்று ஆதாரில் அப்டேட் செய்யலாம்.