சிவகங்கை அருகே உள்ள கீழகண்டனி கிராமத்தில் ஜெயமுத்து, சரண்யா இருவரின் திருமண வரவேற்பிற்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அதில் சில நிபந்தனைகளும் போடப்பட்டுள்ளது.
அதாவது திருமணம் ஆகதாவர்களுக்கு இரண்டு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்றும், திருமணம் ஆனவர்கள் என்றால் ஒரு குவாட்டரும் சிக்கனும் இலவசமாக கொடுக்கப்படும் என்றும் அதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் ஆதார் கார்டை வாங்கி பார்த்து விதிமுறை படி குவாட்டர்களை கொடுத்து விருந்தினர்களை அவர்கள் குஷிப்படுத்தியுள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.