இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கு UIDAI-ன் அமைப்பு வழங்கும் 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் அட்டை ஆகும்.வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அரசின் நலத்திட்டங்கள் பெறுவது வரையில் எண்ணற்ற சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியமானது. நம் கையில் எப்போதுமே ஆதார் கார்டு இருப்பது அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த ஆதார் அட்டை அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு, வங்கி பரிவர்த்தனை செய்ய, சிம்கார்டு வாங்க, கேஸ் இணைப்பு பெற பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு கூட ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவும் ஆதார் கார்டில் நாம் எப்போது விவரங்களை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். அதாவது பெயர், மொபைல் எண், முகவரி போன்ற விவரங்களை முறையாக வைக்க வேண்டும்.
தற்போது ஒரே மாதிரியான போலி ஆதார் கார்டுகள் வந்துவிட்டது. இதனை வைத்து பலவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதனால் ஆதார் அட்டைதாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் உங்களின் ஆதார் கார்டை பாதுகாக்க “மாஸ்க் ஆதார் கார்டு” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதாவது இந்த மாஸ்க் ஆதார் கார்டில் முதல் எட்டு இலக்கங்கள் மறைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் உங்கள் ஆதார் கார்டு எண்ணை வேறு யாரும் பார்க்க முடியாது. uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் டவுன்லோட் ஆதார் கார்டு என்பதை கிளிக் செய்து, உங்களை ஆதார் எண் மற்றும் பிற விவரங்களை உள்ளீட்டு ஆதார் வகைகளில் மாஸ்க் ஆதார் கார்டு என்பதை தேர்வு செய்யவும். உங்களது மாஸ்க் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.