Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு – பான் கார்டு எப்படி இணைப்பது?…. வாங்க பார்க்கலாம்…!!!

உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

ஆதார் கார்டுடன் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
Income tax அதிகாரப்பூர்வ வலைத்தளமான incometaxindiaefiling.gov.in என்ற பக்கத்திற்கு செல்லவும்.
அதில் LINK Aadhaar என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, உங்களின் பான் எண், ஆதார் எண் மற்றும் பெயர் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
தகவல்கள் அனைத்தையும் உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
பான் இணைப்பு பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆதாரில் இருந்து வரும்.

உங்களிடம் ஆன்லைன் வசதி இல்லை என்றால் இவ்வாறு உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்துக்கொள்ளலாம்.

Categories

Tech |