இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது தேவைப்படுவதால் அதனை மிகவும் பொறுப்புடன் வைத்திருக்க வேண்டும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் எப்போதுமே அப்டேட் ஆக இருக்க வேண்டும். அதாவது மொபைல் நம்பர் கட்டாயம் அவசியம். உங்களின் மொபைல் நம்பர் எப்போதும் ஆதார் கார்டில் அப்டேட் ஆக இருந்தால்தான் எந்த ஒரு திருத்தத்தையும் மேற்கொள்ள முடியும்.
ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் நம்மால் அப்டேட் செய்ய முடியும். ஒரு சில தகவல்களை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக நீங்கள் அப்டேட் செய்துவிட முடியும். ஆனால் ஒரு சில தகவல்களை மாற்ற முடியும். ஆதார் கார்டில் உள்ள விவரங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால் என்ன நடக்கும்? இதற்கு எல்லையே இல்லையா என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.
ஆதார் கார்டில் அப்டேட் செய்வதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது ஆதார் கார்டில் உங்களின் பெயரை இரண்டு முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும் . பிறந்த தேதியை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும்தான் ஆதார் திருத்தம் செய்ய முடியும். ஒருவரின் பாலினத்தை ஒரே ஒருமுறை மட்டும் தான் ஆதாரில் அப்டேட் செய்ய முடியும்.ஆதார் கார்டில் அப்டேட் செய்வதற்கு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படும்.மொபைல் நம்பர் போன்ற அப்டேட்டுகளுக்கு பொது சேவை மையங்களில் 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.