ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தினால் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI இன் தண்டனை விதிகளின்படி ஒழுங்குமுறை அல்லது வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு இணங்க தவறினால் நிறுவனத்திற்கு எதிராக புகார் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு மக்களின் தனி உரிமையை பாதுகாக்க புதிய விதிமுறைகளை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது.
அதேபோல் ஆதார் அட்டையை முறைகேடாக பயன் படுத்தினால் தண்டனை வழங்கப்படும் எனவும் UIDAI தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் எனவும், தவறான பயோமெட்ரிக் மற்றும் முகவரிகளை கொடுக்கும் பட்சத்தில அந்த நபர் குற்றவாளியாகக் கருதப்படுவார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.