நாம் பயன்படுத்தும் ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் மிகமுக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்திய குடிமகன்களுக்கு மிக முக்கியமான ஆதாரமாக ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு தனிநபரின் அடையாளமாக மட்டுமல்லாமல் வங்கி பணிக்கும், சட்ட பணிக்கும் அனைத்து இடங்களிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு அடையாள அட்டையாக செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட ஜீவன் பிரமான் பத்திரம் அவசியம்.
இந்த ஆயுள் சான்றிதழ் திட்டமானது பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையின் மூலம் டிஜிட்டல் முறையில் அவர்களின் தகவல்களை பெறுவதால் அவர்களின் ஓய்வு ஊதியம் நேரடியாக வீட்டிலேயே பெறுவதை உறுதி செய்கின்றது. இதைதொடர்ந்து பிரதமரின் pm-kisan யோஜனா திட்டத்தில் நிதியுதவி பெற ஆதார் கார்டு அவசியம். இதன் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் பத்து தொகைகள் வழங்கப்பட்டு விட்டன.
இது தவிர அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியமாகின்றது. சிலிண்டருக்கு மானியம் பெறுவதற்கு ஆதார் அட்டையை சிலிண்டர் இணைப்புடன் இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பணம் வரும். அடுத்தது கல்வி, பள்ளி கல்லூரிகளில் சேர்க்கைக்கான முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. ஆதார் அட்டை வங்கிக் கணக்கைத் திறப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். வங்கிகளில் கடன் வாங்குவதற்கு ஆதார் கார்டு மிகவும் முக்கியம். பான் கார்டு மட்டுமல்லாமல் ஆதார் கார்டை வைத்தும் வங்கிகளில் கடன் வாங்க முடியும். வாடிக்கையாளரின் அடையாள சான்றாகவும் ஆதார் கார்டு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது.