இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இந்தியக்குடிமக்களும் ஒரே டிஜிட்டல் தளத்தின் வாயிலாக அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவு (NeGD) தற்போது UMANG என்ற மொபைல் செயலி ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த UMANG ஆப் வாயிலாக ஆதார் அட்டையின் மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளும் இந்த செயலியின் மூலமாகவே செயல்படுத்த முடியும். இப்போது இந்த மொபைல் செயலியின் வாயிலாக எந்தெந்த ஆதார் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறமுடியும் என்பது பற்றிய தகவலை பார்க்கலாம்.
முதலாவதாக இந்த செயலியின் மூலம் அனைத்து ஆதார் நிலையையும் சரிபார்த்துக் கொள்ளலாம் மற்றும் ஆதார் அட்டையின் பதிவு (அல்லது) புதுப்பித்தல் கோரிக்கையின் நிலையையும் இந்த செயலியின் மூலமாகவே சரிபார்க்க முடியும். அத்துடன் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் மின் அஞ்சலையும் இந்த செயலின் வாயிலாக சரிபார்த்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி குடி மக்கள் இந்த மொபைல் செயலியின் வாயிலாகவே ஆதார்எண் (அல்லது) பதிவு ஐடி சேவைகளை கண்டறிந்து கொள்ளலாம்.
இந்த செயலியின் மூலம் வேறு என்ன விதமான சேவைகள் கிடைக்கிறது என்பதையும் பார்க்கலாம். அதன்படி இந்த UMANG ஆப் வாயிலாக பயோமெட்ரிக் கூட்டுதல் (அல்லது) திறப்பது, ஆதார் பதிவிறக்கம் ஆப்லைன் இ-கேஒய்சி, விர்ச்சுவல் ஐடி உருவாக்கம், கட்டண வரலாறு, பதிவு மற்றும் புதுப்பிப்பு நிலையைச் சரிபார்ப்பது, ஆதார் எண்ணை மீட்டெடுப்பது, ஆதாரை சரிபார்ப்பது போன்ற அனைத்து சேவைகளையும் இத்திட்டத்தின் வாயிலாகவே பெற்றுக்கொள்ள முடியும்.