நம் நாட்டில் ஆதார் கார்டு என்பது அனைத்து அத்தியாவசிய தேவைகளிலும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார்கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஆதார்கார்டு வைத்திருப்போர் தன் கார்டிலுள்ள தகவல்களை எப்படி பாதுகாப்பாக வைத்து இருப்பது என்பது பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இந்நிலையில் ஆதார் தரவுகளை பாதுகாப்பதற்கு அதனை லாக்/அன் லாக் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
# முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.uidai.gov.in-க்கு செல்லவேண்டும்.
# அதன்பின் இங்கே My Aadhaarஐ செலக்ட் செய்து, “Aadhaar Services”-ல் கிளிக் செய்யவேண்டும்.
# அடுத்ததாக Lock/Unlock Biometrics என்பதனைக் கிளிக் செய்யவேண்டும்.
# தற்போது இங்கே உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் கொடுக்கப்பட்ட கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
# அத்துடன் Send OTP விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் வரும் OTP-ஐ உள்ளிட வேண்டும்.
# தற்போது நீங்கள் தேர்வு செய்யக்கூடிய பயோமெட்ரிக் தரவை லாக் /அன்லாக் செய்யும் வசதியைப் பெறுவீர்கள்.
# லாக் பொத்தானைக் கிளிக் செய்தவுடனே உங்களது பயோமெட்ரிக் தரவானது லாக் செய்யப்படும். பின் அன்லாக் பொத்தானைக் கிளிக் செய்தவுடன் அது திறக்கப்படும்.