நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைக்காதவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இறுதி கெடு கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக இதற்கான கால வரம்பு வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட நேரிடும். ஆதார்-பான் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை எப்படி செக் பண்ணலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
முதலில் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
அதில் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை எண்களைப் பதிவிட வேண்டும்.
பதிவிட்ட பின்னர் view Link Aadhar status என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.
ஆதார் அட்டையும், பான் கார்டையும் SMS மூலமாகவே மிக எளிதாக இணைத்து விடலாம்.
567638 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு SMS அனுப்புவதன் மூலம் இணைக்கலாம். வாடிக்கையாளர் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட தனது செல்போன் நம்பரிலிருந்து UIDPAN என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து மேலே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.