Categories
தேசிய செய்திகள்

ஆதார், பான் கார்டு இணைப்பு: தவறினால் ரூ.10,000 அபராதம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

ஆதார் எண்ணுடன் பான் கார்டை  இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது.

இந்தியாவில் குடிமக்களின் முக்கியமாக ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. இதனை போல் பான் கார்டும் ஒரு முக்கிய ஆவணங்களுள் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய நேரடி வரிகள் வாரியம் பான் கார்டுடன் ஆதார் கார்டு எண்ணை உடனடியாக சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு கால அவகாசமும் பலமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதார் எண்கள் வருமான வரி செலுத்துவதற்கு மிகவும் அவசியம் என தீர்ப்பளித்தது. அதனை அடுத்து பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணுடன், பான் கார்டு எண்ணையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணத்தினால் இதற்கான கால அவகாசம் மீண்டும் ஒரு முறை நீட்டித்த நிலையில், அதன்பின் பல நபர்கள் இணைக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில்  கால அவகாசத்தை  இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.ஆனால்  இந்த கால அவகாசத்திற்குள் அதனை இணைக்காவிட்டால் பான் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் ரூ.10,000 அவர்களுக்கு அபராதம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  •  பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் அதில் உள்ள சரியான பெயரை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் வருமான வரித்துறை வழங்கி உள்ள அறிவுரையின்படி, யுஐடிஏஐ சோதனை செய்த பின்,இணைப்பு உறுதிசெய்யப்படும்.
  • இது மட்டுமல்லாமல் செல்பேசியில் எஸ்.எம்.எஸ் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கு UIDPAN என்று டைப் செய்து இடைவெளி விட்டு தங்களது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.
  • அதன் பின் சிறிய இடைவெளி விட்டு உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு அதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம் என்ற வசதியை  செய்துள்ளது.

Categories

Tech |