ஆதார் அட்டையுடன் பான் கார்டை அனைவரும் இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஆதார் அட்டை அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண் வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆதார் அட்டையை குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. இந்த பான் கார்ட் வங்கி களில் 50,000 மேல் பணம் போடுவதற்கும், வரி செலுத்துவதற்கும் பயன்படுகிறது.
இந்த பான் கார்டு மூலம் ஏற்படும் வரி ஏய்ப்புகளை தடுக்கவும், கடன் மோசடிகளை குறைக்கவும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்தது. இந்த பான் கார்டை இணைப்ப்பதற்கு மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதை தவறவிட்டவர்களுக்கு அபராதத்துடன் கூடிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை இணைக்காவிட்டால் பான் கார்டு நம்பர் செயலிழந்துவிடும். இதனால் வரி செலுத்துதல், வங்கிகளில் பணம் போடுதல் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்படும். எனவே மக்கள் உடனே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். இந்த பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணையதளம் மூலமாகவும் இணைக்கலாம். அதாவது www.incometax.gov.in என்ற இணையதளம் மூலமாக இணைத்துக் கொள்ளலாம்.