Categories
தேசிய செய்திகள்

ஆதார் – பான் கார்டு இணைப்பு…. இன்றே (ஜூன் 30) கடைசி நாள்…. தவறினால் ரூ.10,000 அபராதம்…. எப்படி இணைப்பது?….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு என்பதை வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனைப் போலவே பான் கார்டு என்பது வருமான வரி, பண பரிவர்த்தனை மற்றும் வங்கி போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வரி ஏய்ப்பை தடுக்கவும் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

ஆதார் போலவே இதுவும் அரசின் அதிகாரப்பூர்வ அடையாள ஆவணமாக உள்ளது. எனவே பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் பலமுறை நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

அப்படி கால அவகாசம் முடிவதற்குள் பான் கார்டை ஆதாருடன் ஏற்காவிட்டால் உங்களது பான் கார்டு செயலிழந்துவிடும். அதனைப் போலவே ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க நேரிடும். வங்கி வாடிக்கையாளர்கள் பான் கார்டு இணைக்காவிட்டால் அவர்களின் வங்கி சேவைகள் சிக்கலாகிவிடும். எனவே இதனை எளிதில் நீங்களே இணைத்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் வருமான வரித்துறையில் https://www.incometaxindiaefilling.gov.in/home என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று இணைத்து விடலாம்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருந்தால் மட்டும் போதும் அதனை வைத்து எளிதில் இணைத்து விட முடியும். இதனை தவிர எஸ்எம்எஸ் மூலமாகவும் நீங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்துக் கொள்ளலாம். அதாவது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <12 இலக்க ஆதார் எண்> <10 இலக்க PAN எண்> என டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.

Categories

Tech |