Categories
தேசிய செய்திகள்

ஆதார்-பான் மொபைல் மூலமாக…. ஈசியாக இணைக்க…. இதை மட்டும் செய்தால் போதும்…!!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய  மட்டுமே இருக்கிறது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு ஜூன்-30க்குள் இணைக்க்காவிட்டால் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்கிற கே.ஒய்.சி செல்லாது. மேலும் பான் எண்ணும் செயல்பாட்டில் இருக்காது.

கே.ஒய்.சி செயலிழந்து விட்டால் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடியாது. மேலும் பிக்ஸட் டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கும் 10% க்கு பதிலாக 20% டிடிஎஸ் பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இணைப்பை செல்போன் மூலமாக செய்ய 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு உங்க மொபைல் என்னிலிருந்து UIDPAN மற்றும் 12 இலக்க ஆதார் எண், 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணத்திற்க்கு UIDPAN 111568225333 BASPA0208H என டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் பாண்-ஆதாரை இணைக்கலாம்.

Categories

Tech |