ஆதார் கார்டை போன்று விரைவில் மக்கள் ஐடி அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஆதார் கார்டு எப்படியோ அதுபோல தமிழகத்தில் வசித்து வரும் மக்களுக்கு தற்போது மக்கள் ஐடி எனும் ஒரு கார்டை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருவாய் கல்வி, முதல்வர் காப்பீட்டு திட்டம், பொது விநியோகம், கருவூலம், சுகாதாரம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு துறைகளிடம் உள்ள தகவல்களை வைத்து இந்த தரவு தளம் உருவாக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வசித்து வருபவர்களுக்கு 10 முதல் 12 இலக்க மக்கள் ஐடி அட்டையை அனைத்து தமிழக மக்களுக்கு வழங்க இருப்பதாகவும் இந்த மக்கள் ஐடி சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழக அரசால் இந்த மக்கள் அடி உருவாக்கப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.