Categories
தேசிய செய்திகள்

ஆதார் முதல் ஓட்டுனர் உரிமம் வரை…. இனி மொபைலில் வாட்ஸ் அப் இருந்தால் மட்டும் போதும்…. எல்லாமே ரொம்ப ஈஸி….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.இது வெறும் மெசேஜ் செயலியாக மட்டுமல்லாமல் பல நிறுவனங்களில் whatsapp இல்லாமல் வேலையே முடங்கிவிடும் என்ற நிலை வந்து விட்டது.நமது முக்கியமான ஆவணங்களை வாட்ஸப்பில் எப்போது வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து பயன்படுத்தும் வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா?.அதாவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிலாக்கர் என்ற வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலமாக மக்கள் தங்களின் ஆதார் கார்டு, பான் கார்டு, அடையாள அட்டை, மதிப்பெண் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பிறப்பு சான்றிதழ், பென்ஷன் சான்றிதழ் மற்றும் வாழ்நாள் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதில் உள்ள ஆவணங்களை வாட்ஸப் மூலமாக டவுன்லோட் செய்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இதற்கு முதலில் உங்கள் மொபைலில் 9013151515 என்ற எண்ணை சேர்க்க வேண்டும். அந்த எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஹலோ என்று மெசேஜ் அனுப்பவும். அதன் பிறகு உங்களுக்கு டிஜி லாக்கர் சேவைகளை தேர்வு செய்வதற்கான ஆப்ஷன் வரும். அதில் இந்த சேவையை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் டிஜி லாக்கரை இணைப்பதற்கான ஆதார் எண் கேட்கப்படும். ஆதார் எண்ணை கொடுத்தவுடன் மொபைலுக்கு வரும் ஓடிபி பயன்படுத்த வேண்டும்.தற்போது உங்கள் டிஜி லாக்கரில் உள்ள ஆவணங்களின் பட்டியல் வரும். அதில் தேர்வு செய்து தேவையான ஆவணத்தை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |