Categories
தேசிய செய்திகள்

ஆதார் மூலம் UPI-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

UPIஐ ஆக்டிவேட் செய்வதற்கு வங்கிகணக்கு எண், மொபைல் எண் மற்றும் டெபிட்கார்டு போன்றவை தேவை. எனினும் இப்போது ஆதார் கார்டின் உதவியுடன் UPIஐ செயல்படுத்தலாம். அதாவது, ஆதார் OTP-ஐப் பயன்படுத்தி UPI ஆக்டிவேட் செய்வது எப்படி என இங்கே தெரிந்துகொள்வோம்.

# ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தினைப் பயன்படுத்த விரும்பும் போன்பே பயனர்கள், ஆன்போர்டிங் செயல் முறையைத் துவங்க தங்களது ஆதார் எண்ணின் கடைசி 6 இலக்கங்களை உள்ளிடவும்.

# அதன்பின் அங்கீகார செயல்முறையை முடிக்க அவர்கள் இந்தியதனித்துவ அடையாள ஆணையம் மற்றும் அவர்களது வங்கியில் இருந்து OTP பெறுவர்.

# அடுத்ததாக வாடிக்கையாளர்கள் போன்பே பயன்பாட்டில் பணம் செலுத்துதல் மற்றும் வங்கிக்கணக்கு இருப்பைச் சரிபார்த்தல் ஆகிய அனைத்து UPI அம்சங்களையும் அணுகலாம்.

# ஆதார் அட்டையை மொபைல் மற்றும் வங்கிகணக்குடன் இணைக்கவும்.

# இவ்வசதியைப் பயன்படுத்த உங்களது ஆதார் அட்டை எண்ணை மொபைல் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணுடன் இணைக்கவேண்டும்.

Categories

Tech |