Categories
தேசிய செய்திகள்

ஆதார்-மொபைல் எண் இணைப்பு….. எப்படின்னு தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைப்பது இப்போது கட்டாயம் ஆகும். அந்த வகையில் நீங்கள் இதனை செய்யவில்லை எனில், அரசாங்க சேவைகளை செய்வதில் சிக்கலை சந்திக்க நேரிடலாம். தற்போது மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன்  இணைப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

#  நீங்கள் இந்திய தபால் சேவை இணையதளத்திற்கு போக வேண்டும்.

#அதன்பின் உங்களது பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் விபரங்களை உள்ளிடவும்.

# தற்போது கீழ் தோன்றும் மெனுவில் PPB-Aadhaar சேவையை தேர்ந்தெடுக்கவும்.

# அடுத்ததாக UIDAI-Mobile/Email to Aadhaar linking/update என்பதை கிளிக் செய்து, பின் விபரங்களை உள்ளிட வேண்டும்.

# உங்கள் எண்ணுக்கு வரும் OTPயை உள்ளிட்ட பின் Confirm Service Request என்பதைக் கிளிக் செய்யவேண்டும்.

இதையடுத்து ஒரு ஆதார் எண் வழங்கப்படும். அதன் வாயிலாக விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்க இயலும். பின் உங்களது விண்ணப்பம் சரிபார்ப்பிற்காக அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு அனுப்பப்படும். தபால் நிலைய அதிகாரி உங்களது முகவரிக்குச் சென்று உங்களிடம் இருந்து பயோமெட்ரிக் விபரங்களைப் பெறுவார். இதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

மொபைல் எண், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரிபார்ப்பது?

# UIDAIன் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

# அதன்பின் மேல் இடது மூலையில் தோன்றும் My Aadhaar விருப்பத்தை கிளிக்செய்ய வேண்டும்.

#இதையடுத்து verify my email/mobile number என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

#அடுத்ததாக நீங்கள் அட்டைஎண், மொபைல் எண், கேப்ட்சா ஆகிய தகவல்களை உள்ளிடவும்.

# இதன் வாயிலாக மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டு இருக்கிறதா?.. இல்லையா?.. என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

Categories

Tech |