Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி… சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்… காரணம் என்ன..? பெரும் பரபரப்பு…!!!!!

புதுச்சேரியில் ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் பிள்ளை சாவடி மீனவ கிராமங்களை கடல் அரிப்பிலிருந்து காப்பதற்காக தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் தமிழக மீனவ பகுதியில் கடல் நீர் உட்பகுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியிலும் கற்கள் கொட்டப்பட வேண்டும் என தமிழக மீனவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் நேற்று இரவு ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மூன்று வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

இந்த சூழலில் கடல் அரிப்பை தடுப்பதற்கு கற்கள் கொட்ட வலியுறுத்தி புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆதார், ரேஷன் அட்டைகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீஸர் வருவாய்த்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர் இதனால் அந்த பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

Categories

Tech |