Categories
தேசிய செய்திகள்

ஆதார் வாடிக்கையாளர்களே!…. ஆன்லைனில் விபரங்களை மாற்றணுமா?… இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆதார் அட்டை முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக திகழ்கிறது. அரசுத் துறை, தனியார்துறை, பள்ளி-கல்லூரிகள் மற்றும் தனிநபர் சார்ந்த பிற வேலைகளுக்கும் ஆதார் எண் இப்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் ஆதார் கார்டு இன்றி எந்த வேலையும் செய்ய முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டது. இந்த ஆதாரை நாம் அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம் ஆகும். அதற்குரிய வசதியை UIDAI அமைப்பு நமக்கு வழங்கி வருகிறது. தற்போது ஆதார்எண் அவசியமான ஒன்றாக இருப்பதால் அதனை எப்போதும் அப்டேட்டாக வைத்து இருப்பது அவசியமாகும்.

அந்த வகையில் முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆதாருடன் மொபைல் எண் இணைந்து இருப்பது கட்டாயமாகும். இப்போது ஆதாரில் விபரங்களை வீட்டிலிருந்தபடியே எளிதாக மாற்றலாம். அத்துடன் புது ஆதார் கார்டையும் ஆன்லைன் வாயிலாக பெறலாம். அதாவது UIDAI யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக புது ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து அதனை டவுன்லோட் செய்யலாம். ஆகவே இப்போது ஆதாரில் விபரங்களை மாற்றுவது பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆதார் விபரங்களை அப்டேட் செய்யும் முறைகள் என்னென்ன? 

# முதலாவதாக UIDAI இணையதளத்திற்கு செல்லவும். ஆதார் சேவை பிரிவில், சுய சேவை புதுப்பிப்பு விருப்பத்தினை கிளிக் செய்து கேப்ட்சா குறியீட்டை பதிவிடவும்.

# பிற விபரங்களை உள்ளிட்டு பின், ஓடிபி உருவாக்கு என்பதைக் கிளிகசெய்து மொழியைத் தேர்ந்தெடுத்து உங்கள் விபரங்களைப் புதுப்பிக்கவும்.

# அதன்பின் மீண்டுமாக வரும் ஓடிபி-ஐ உள்ளிட்டு 50 ரூபாய் கட்டணம் செலுத்தவும்.

# ஆகவே மேற்கண்ட செயல்களுக்கு உங்களது மொபைல்எண் மற்றும் ஆதார் எண் மட்டுமே தேவைப்படும்.

Categories

Tech |