Categories
தேசிய செய்திகள்

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு இனி வீடுதேடி வரும்…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆதார்அட்டை என்பது ஒரு தனிமனிதனின் முக்கிய ஆவணமாக இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துத் துறைகளில் உள்ள பணிகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக இருப்பதால் அதை வங்கி மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் ஆகும். இத்தகைய பயன்பாடுடைய ஆதார் கார்டை எப்போதுமே நாம்அப்டேட்டாக வைத்து இருப்பது அவசியமாகும்.

அந்த அடிப்படையில் தங்களுடைய ஆதார் அட்டையிலுள்ள புகைப்படம், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பயோமெட்ரிக் ஆகிய சிறப்பு அம்சங்களை UIDAI வழங்குகிறது. இவற்றில் ஏதேனும் குறைபாடு இருப்பின் முந்தைய காலக்கட்டத்தில் அந்தந்த பகுதிகளிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று மாற்றவேண்டும். ஆனால் ஆதார் கார்டிலுள்ள மாற்றங்களை அதிகமான மக்கள் மாற்ற முடியாமல் இருந்ததால், அவர்களின் நலன் கருதி UIDAI தளம் வீட்டில் இருந்தே மொபைல் வாயிலாக செய்வதற்கான வசதியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் தற்போது ஒரு அறிவிப்பை UIDAI வெளியிட்டிருக்கிறது. ஆதார் சேவைகளை வீட்டு வாசலில் கொண்டுவர UIDAI உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆதார் கார்டிலுள்ள திருத்தங்களை சரிசெய்ய UIDAI அமைப்பானது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில் பணியாற்றும் தபால்காரர்களுக்கு பயிற்சியளித்து வருவதாகவும், இந்த சிறப்பு பயிற்சி முடிந்த தபால்காரர்கள் ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய விரும்புபவர்கள் வீட்டிற்கே சென்று ஆதார் அப்டேட் சர்விஸ்களை தபால்காரர்கள் செய்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |