அனைவருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகவே மாறி விட்டது. முக்கியத்துவம் உடைய ஆதார் கார்டில் உங்களது முகவரி சரியானதாக இல்லையெனில் நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். வாடகை வீடுகளில் வசிக்கும் நபர்கள் சில நேரங்களில் சில காரணங்களால் அடிக்கடி வீடு மாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அவ்வாறு நீங்கள் வீடு மாற்றும்போது உங்களது ஆவணங்களிலும் முகவரியை மாற்றவேண்டியது கட்டாயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆதார் அட்டைதாரர்கள் முகவரியை மாற்றா விட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்கநேரிடும். ஆன்லைன் வாயிலாக நாம் நம் முகவரியை ஆதார் கார்டில் எப்படி அப்டேட் செய்யலாம் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
# ஆதார் கார்டில் முகவரியைப் அப்டேட் செய்ய முதலாவதாக uidai.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதள பக்கத்துக்கு போக வேண்டும்.
# அதன்பின் “மை ஆதார்” என்ற ஆப்ஷனை தேர்வுசெய்ய வேண்டும்.
# அடுத்ததாக ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்குரிய ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இப்போது முகவரியை அப்டேட் செய்யும் ஆப்ஷனுக்கு போக வேண்டும்.
# அதன்பிறகு உங்களது ஆதார் கார்டிலுள்ள 12 இலக்க எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
# அதனை தொடர்ந்து மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். பின் முகவரியை மாற்றுவதற்குரிய ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வுசெய்து நீங்கள் முகவரியை அப்டேட் செய்யலாம்.
# அத்துடன் நீங்கள் வசிக்கும் முகவரிக்கான ஆதாரத்தையும் இணைக்கவும்.
# இதற்கு ரூபாய்.50 சேவைக் கட்டணம் செலுத்தவேண்டும். அவ்வாறு கட்டணம் செலுத்தியதும் ரசீது கிடைக்கும். நீங்கள் இதை செய்த 24 மணிநேரத்தில் உங்களது ஆதார் அட்டையில் முகவரி அப்டேட் செய்யப்படும்.