Categories
தேசிய செய்திகள்

ஆதார் வைத்திருப்போருக்கு புது வசதி அறிமுகம்…. அதுவும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்?… வெளியான சூப்பர் தகவல்…..!!!!

ஆதார் வழங்கக்கூடிய அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) அவ்வப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பொதுமக்களின் வசதிக்கேற்க ISRO உடனான ஒப்பந்தத்தின்கீழ் புவன் ஆதார் போர்ட்டலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக ஆதார் பயனாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை எளிதாகக் கண்டறியலாம். இந்த புது அம்சத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். இதன் சிறப்பம்சம் என்னவெனில், பயனாளர்கள் ஆதார் மையத்தின் தகவலை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

ஆதார்சேவை மையத்தின் இருப்பிடத்தினை கண்டறிவது எவ்வாறு?

# முதலாவதாக https://bhuvan.nrsc.gov.in/aadhaar/-க்குச் செல்ல வேண்டும்.

# அதன்பின் உங்களது அருகிலுள்ள ஆதார் மையம் குறித்த தகவலைப் பெற “செண்டர்” (Centre Nearby) என்ற ஆப்ஷனை கிளிக்செய்ய வேண்டும்.

# இங்கே உங்களது ஆதார் மையம் உள்ள இடம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

# இது தவிர்த்து Search by Aadhaar Seva Kendraலும் தகவலையும் பெறலாம்.

# இங்கே நீங்கள் ஆதார் மையத்தின் பெயரை உள்ளிட்டதும், மையத்தின் தகவலைப் பெறுவீர்கள்.

# பின் நீங்கள் விரும்பினால் உங்களைச் சுற்றியுள்ள ஆதார் மையம் பற்றிய தகவல்களையும் பின்கோட் வாயிலாக தேடி ( Search by PIN Code ) பெறலாம்.

# அடுத்ததாக கடைசி ஆப்ஷனாக மாநில வாரியான ஆதார் சேவை மையத்திற்கான “State-wise Aadhaar Seva Kendra” ஆப்ஷன் வரும். இதை தேர்ந்தெடுத்த பின் மாநிலத்திலுள்ள எல்லா ஆதார் மையங்களின் தகவலை பெறலாம்.

Categories

Tech |