Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஆதிதிராவிடர்கள் கவனத்திற்கு” தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன்கள்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது  3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாட்கோ மூலம் கடன் பெற விரும்பும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் http:// application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் http:// fast.tahdco.com என்ற இணையதளம் முகவரியில்  தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

மேலும் இதுவரை தாட்கோ மூலம் 109 பேருக்கு 8  கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 109 டிராக்டர்கள் வாங்க மானியமாக 2  கோடியே 45 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணை அமைத்தல், ஆடை தயாரிக்கும் நிறுவனம் அமைத்தல், சுற்றுலா வாகனங்கள் வாங்குதல், புதிய கிணறு அமைத்தல் என 153  பேருக்கு இதுவரை 11 கோடி 18 லட்ச ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 கோடியே  28 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சாந்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |