தமிழக அரசு ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் வழங்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது மட்டுமல்லாமல் இலவச கல்வி மற்றும் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையிலான உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆதிதிராவிடர் இன மாணவர் தங்கி படிப்பதற்கு வசதியாக மாவட்டங்கள் தோறும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் நல விடுதிகளில் சேர அந்த கல்வி நிறுவனங்கள் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ஐந்து புதிய கட்டிடங்கள் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது வாடகை விடுதி மற்றும் பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கி வரும் ஐந்து கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. இதற்காக அரசு ரூ.27.26 கோடி ஒதுக்கீடு செய்ததற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.