நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடப்பு கல்வி ஆண்டில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயின்றவரும் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியான மாணவிகள் வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் தேசிய கல்வி உதவித்தொகை வலையத்தளத்தில் பொது சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண் சம்பந்தமான தகவல்களை விண்ணப்பத்தில் அளிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் .
மாநில அரசின் திட்டமான முழு கல்வி கட்டணத்தையும் அரசே வழங்கும் திட்டத்தின் கீழ் பூர்வீக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் தங்களின் ஆதார், ஜாதி சான்றிதழ் நகல்கள் மற்றும் பெற்றோர் பாதுகாவலர் உறுதிமொழி அசல் போன்றவற்றை பள்ளி மற்றும் கல்லூரிகளில் உரிய நேரத்திற்குள் சமர்ப்பித்த உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது