Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். அதே சமயம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்தில் ஏதாவது தவறுகள் இருந்தால் அது மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.அதனை மாணவர்கள் உடனடியாக சரி செய்யவில்லை என்றால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |