Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க 5 லட்சம் மானியம்…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் விவசாய நிலம் வாங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிலம் வாங்கும் இந்த திட்டத்தின் கீழ் நஞ்சை மற்றும் புஞ்சை விவசாய நிலம் வாங்க திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தாட்கோ திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதிகபட்சமாக இரண்டரை ஏக்கர் நஞ்சை, ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். பயன்பெற விருப்பமுள்ளவர்கள் தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |