Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர்…. ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் மானியத்துடன் ஆவின் பாலகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மின் வாகனம், உரைவிப்பான்,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து மூன்று லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆவின் நிறுவனத்துடன் ஒப்பந்த நகல், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை புகைப்படத்துடன் இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர் 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-25246344, 94450 29456 என்ற எண்களின் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |