திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவருக்கு இட ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணித்தனர். மேலும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் வீடுகளில் ஏற்றியிருந்த கருப்பு கொடிகளையும் காவல்துறையினர் அகற்றினர். இருந்தபோதும் வாக்களிக்க கிராம மக்கள் செல்லவில்லை. இதன் காரணமாக நாயக்கனேரி ஊராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.