Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆதின மடங்கள் தகவல் அறியும் திட்டத்தின் கீழ் வராது”…. மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!!!

ஆதின மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள தர்மபுரம் ஆதீனம் ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, பழமையான ஆதின மடங்களில் எங்கள் மடமும் ஒன்று. எங்கள் மடமானது சைவ சித்தார்ந்த மரபைச் சார்ந்தது. அரசிடம் இருந்து எந்தவித நீதியோ, உதவியோ நாங்கள் பெறவில்லை. மடத்தின் சொந்த நிதியை பயன்படுத்தி மட்டுமே எங்கள் மடம் இயங்கி வருகின்றது. ஆதின மடம் மற்றும் ஆதின கர்த்தர் பற்றி விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு சிலர் தொந்தரவு செய்கின்றனர்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பொது நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் தான் வரும். அதிலும் மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல. ஆகையால் ஆதின மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது என உத்தரவிட்ட வேண்டும் என அவர் கூறியிருந்த நிலையில் விசாரணைக்கு பின் நீதிபதி சம்பந்தப்பட்ட விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்பட்டு வராது என உத்தரவிட்டார்.

Categories

Tech |