Categories
சினிமா

“ஆதிபுருஷ்” படத்திற்கு வந்த புது சிக்கல்…. அயோத்திராமர் கோவிலின் தலைமை குரு சொல்வது என்ன?…. பரபரப்பு…..!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜ மவுலி இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி படம் வாயிலாக மிகவும் பிரபலமானார். இவர் இப்போது டிரைக்டர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படமானது “ஆதிபுருஷ்”. ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர்-டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தை வெளியிடக்கூடாது எனவும் அதன் வெளியீட்டை தடைசெய்ய வேண்டும் எனவும் அயோத்திராமர் கோவிலின் தலைமை குரு வலியுறுத்தி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமராக நடித்திருக்கும் நடிகர் பிரபாஸ், செங்கோட்டையில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று ராவண பொம்மையை அம்புவிட்டு அழித்த சம்பவம் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் மறுபக்கம் அந்த திரைப்படத்திற்கு எதிராக படத்தையே தடைசெய்ய வேண்டும் என்ற குரல்களும் கிளம்பியுள்ளது. அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ், ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு எதிரான தன் கண்டனத்தை பதிவுசெய்துள்ளார். ஆதிபுருஷ் படத்தில் ராமர் மற்றும் அனுமனை தவறாக சித்தரித்து இருக்கின்றனர். எனவே அதன் வெளியீட்டை தடைசெய்ய வேண்டும் என கண்டித்து இருக்கிறார். பொங்கல் பண்டிகையையொட்டி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள சூழ்நிலையில், இப்படியொரு பெரிய சிக்கல் படத்திற்கு எழுந்துள்ளது.

Categories

Tech |