Categories
சினிமா தமிழ் சினிமா

ஆதிபுருஷ் 3டி டீசர்…. “60 தியேட்டரில் திரையிடும் பிரபாஸ்”….!!!!!!

ஆதிபுருஷ் 3டி டீசரை ரசிகர்களுக்காக 60 தியேட்டர்களில் பிரபாஸ் திரையிடுகின்றார்.

நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கீர்த்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

இத்திரைப்படத்தின் ஷூடிங்கானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர். அண்மையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி வரவேற்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தெலுங்கு ஊடகங்களுக்கு ஆதிபுருஷ் திரைப்படத்தின் 3டி டீசரை திரையிட்டு காண்பித்திருக்கின்றார்கள். ஐதராபாத்தில் இருக்கும் ஏ.எம்.பி திரையரங்கில் இந்த சிறப்பு காட்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த பிரபாஸ் ஆதிபுருஷ் திரைப்படத்தின் 3d பதிப்பு அபரிமிதமான வரவேற்பு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

எனது திரைப்படத்தை 3டியில் பார்த்து ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு குழந்தையாக மாறி பரவசம் அடைந்தேன். இந்த டீசரை தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இது நிச்சயமாக திரையரங்கில் காண வேண்டிய ஒரு திரைப்படம். இத்திரைப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி காத்திருக்கின்றோம். மேலும் அடுத்த பத்து தினங்களுக்குள் திரைப்படம் குறித்த பல சர்ப்ரைஸான கண்டெண்டுகளை வழங்க உள்ளோம் என தெரிவித்திருக்கின்றார்.

Categories

Tech |