Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆதிரெத்தினேசுவரர் கோவிலில்…. பிரதோஷ விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை பகுதியில் சினேகவல்லி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், சந்தனம், பன்னீர் போன்ற வாசனைப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து நந்தீஸ்வரர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் தந்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் ஓரியூர், தீர்த்தாண்டதானம், எஸ்.பி பட்டினம், திருவொற்றியூர், பாண்டுக்குடி, நம்புதாலை, தொண்டி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்றது.

Categories

Tech |