ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே ஆதிவாசி குடியிருப்பு காலனி உள்ளது. இவர்களிடம் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி குறைகளை கேட்டறிந்தார். இவர் ஆதிவாசி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதன்பிறகு 38 குடும்பங்களுக்கு தண்ணீர் சேமிக்கும் பிளாஸ்டி டேங்குகளை டிஐஜி வழங்கினார்.
இதனையடுத்து டிஐஜி முத்துசாமி ஆதிவாசி மக்களிடம் உங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமெனக் கூறினார். அதன் பிறகு குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டுமெனவும் உங்களுடைய குறைகள் எதுவாக இருந்தாலும் காவல்துறையில் தெரிவிக்கலாம். இதற்கு கூடிய விரைவில் உரிய தீர்வு காணப்படும் என டிஐஜி முத்துசாமி கூறினார்.