Categories
மாநில செய்திகள்

ஆத்தாடியோ..! தமிழகத்தில் புத்தாண்டுக்கு மது விற்பனை…. இத்தனை கோடி டார்கெட்…!!!

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மதுபான கடைகள் உள்ளன. இவைகளில் தினமும் சராசரியாக 100 கோடி வரையிலும் மது விற்பனை நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை 2 மடங்கு அதிகரிக்கும். இதேபோல் வருகிற புத்தாண்டை முன்னிட்டு 2 நாட்கள் (டிச.,31, ஜன.,1) மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, ஞாயிறு 2 நாட்களிலும் மது விற்பனை 3300 கோடி முதல் 7400 கோடி வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. கடந்த வருடம் பொங்கல் தினத்தில் தொடர்ச்சியாக விடுமுறை இருந்ததால் மூன்று நாட்களில் 675 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |