பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர். இதையடுத்து நடிகை மீரா மிதுனுக்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் புத்தி பேதலிப்பு ஏற்பட்டது போல், மாற்றி மாற்றி பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீரா மிதுன் காவலில் எடுத்து, மனநல ஆலோசகரை வைத்து பரிசோதித்து பிறகு வாக்குமூலம் பெற சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீசாரை கண்டதும் மீரா கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் கூறப்படுகிறது.