கொரோனா அபாயம் இல்லாத நாடுகளிலிருந்து பிரிட்டன் வரும் பயணிகளுக்கும் புதிய விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனோவிற்கான அபாயம் இருப்பதாக சுமார் 33 நாடுகள் அறிவிக்கப்பட்டு அதிலிருந்து பிரிட்டனிற்க்கு வரும் பயணிகள் கட்டாயமாக சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று புதிய விதிமுறை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட 33 நாடுகள் அல்லாத நாடுகளில் இருந்து திரும்பும் பிரிட்டன் பயணிகளும் சுமார் பத்து நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்வதுடன் மூன்று முறை கொரோனாவிற்கான பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சமயத்தில் நான்காவது பரிசோதனை செய்யப்படும். மேலும் இந்தப் பரிசோதனைகள் அனைத்திற்கும் தேவைப்படும் தொகையும் அந்தந்த பயணிகள் தான் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட நான்கு பரிசோதனைகளை பயணிகள் செய்து கொள்ளாத பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தகவல் வெளியாகவில்லை.
எனினும் ஒரு பரிசோதனைக்கு சுமார் 150 பவுண்டுகள் வரை செலுத்த வேண்டியதிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனிற்கு திரும்பும் பயணிகளுக்கு சுமார் 72 மணி நேரத்திற்கு முன்பாகவே பரிசோதனை செய்யப்படும். அதில் பாதிப்பு இல்லை என்று தெரிந்த பின்பு பிரிட்டன் வந்து பத்து நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன்பின்பு தனிமைப்படுத்தப்பட்ட பின் இரண்டாவது நாளில் முதல் பரிசோதனை செய்யப்படும். இதனைத்தொடர்ந்து 8வது நாளில் 4வது பரிசோதனையை கட்டாயமாக செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.