Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!” இவ்வளவு தங்கமா..? மலையை தோண்டியெடுக்க திரண்ட மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!

காங்கோவில் தங்கம் நிறைந்த மலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கத்தை தோண்டியெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

காங்கோ நாட்டில் உள்ள kivu என்ற மாகாணத்தில் Luhihi என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள மலையில் அதிகமான தங்கம் மணல் முழுவதும் நிறைந்து காணப்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கிராமத்தில் வசிக்கும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கடப்பாறை, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் அப்பகுதியில் திரண்டனர்.

இதனையடுத்து ஒவ்வொருவரும் மண்வெட்டியால் தோண்டியெடுத்து தங்களுக்கு கிடைத்தவற்றை எல்லாம் அள்ளியெடுத்து வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்று அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றினர்.

மேலும் தங்கச்சுரங்கத்தில் தங்கத்தை எடுக்கவும் தடை விதித்தனர். அந்த மலையில் ஏறக்குறைய 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தங்கம் நிறைந்து காணப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான மக்கள் தங்கத்தை வெட்டி எடுத்து செல்லும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |