பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடி பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது.
பிரிட்டன் பிரெக்சிட்டிற்கு பின்பு தங்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க பிரான்சின் சில படகுகளை மட்டுமே அனுமதிப்பதோடு, பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் கடுப்பாகி அதனை பழிவாங்க தங்கள் கடலுக்கு அடியில் பிரிட்டனிற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்துவிடுவதாக பிரான்ஸ் கடல்வளத்துறை அமைச்சர் Annick Girardin மிரட்டல் விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து பிரான்சின் 100 மீன்பிடி படகுகள் ஜெர்சி தீவின் ஒரு துறைமுகத்தை முற்றுகையிடப்போவதாக பிரிட்டன் உளவுத்துறைக்கு தெரியவந்துள்ளது. இதனால் பிரிட்டன் ஜெர்சி தீவை கண்காணிக்க பீரங்கிகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் கொண்ட HMS Severn மற்றும் HMS Tamar போன்ற 2 போர்க்கப்பல்களை அங்கு அனுப்பிவிட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரான்சும் போர்க்கப்பல்களை அனுப்பியிருந்தது. எனினும் பிரிட்டன் போர்கப்பல்களை விட பிரான்ஸ் கப்பல்கள் மிக சிறியதாக இருந்துள்ளது. இதனால் பதறிய பிரான்ஸ் கப்பல்கள் திரும்ப நாட்டிற்கே சென்றுவிட்டன. அதன் பின்பு சற்று தூரத்தில் நின்று பிரிட்டன் கப்பல்கள் கண்காணித்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் பிரான்ஸ் மீனவர்கள் கலாயிஸ் துறைமுகத்தை சூழப்போவதாக மிரட்டியுள்ளனர். மேலும் தங்களின் அனைத்து மீன்பிடி படகுகளையும் ஜெர்சி தீவு பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு விடவில்லையெனில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பிரிட்டன் பொருட்கள் செல்வதை தடுப்போம் என்கின்றனர். இதனால் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.