‘பாம்பை கண்டால் படையே நடுங்கும்’ என்பது நிதர்சனமான உண்மை. சிறிய பாம்பை நம் வீட்டின் வெளியிலேயே அல்லது பொது இடங்களில் கண்டாலோ பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிப்போம். பாம்பை பார்த்து பயப்படாதவர்கள் என யாருமே இருக்க முடியாது. அதுவும் வானிலிருந்து பாம்பு விழுந்தால் ஒருகணம் மூச்சு நின்று விடும் அல்லவா..? அது போன்ற ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பரபரப்பான சாலையின் நடுவே வானில் இருந்து பாம்பு விழுவது போன்று தோன்றுகிறது. ஆனால் அது என்னவென்றால் மிக நீளமான பாம்பு கம்பியில் சுற்றிக்கொண்டு அமர்ந்துள்ளது.
A massive snake falling from the sky is my worst nightmare 🐍😨#viralhog #snake #spooktober #nope #nightmarefuel pic.twitter.com/VS9P6q9Spy
— ViralHog (@ViralHog) October 15, 2021
முதலில் இதனைப் பார்த்த மக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்த சிலர் பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் அங்கு வந்து பாம்பு எப்பொழுது கீழே விழும் என்பதை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனை சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து வந்தனர். சிறிது நேரம் கம்பியில் சுற்றிக் கொண்டிருந்தபோது பாம்பு திடீரென்று கம்பியில் இருந்து கீழே விழுந்தது. அதனைக் கண்டதும் அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் தயார் நிலையில் இருந்த பாம்பு பிடிக்கும் நபர்கள் அதனை பிடித்துக் கொண்டு சென்று விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த பலரும் இந்த பாம்பு எவ்வளவு நீளமாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.