பிரிட்டன் பிரதமர் தன் காதலியுடன் வசிக்கும் வீட்டை அழகுபடுத்த தேவைப்படும் பணத்திற்காக தொண்டு நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி சைமண்ட்ஸ் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதாக ஏற்கனவே அவர் மீது அதிகமான புகார்கள் உள்ளன. இந்நிலையில் இவர் தன் காதலரான பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தற்போது வசித்துவரும் வீட்டை மேலும் அழகுப்படுத்த விரும்புகிறாராம்.
இதற்காக அதிக தொகை தேவைப்படுகிறதாம். எனினும் பிரதமர் தற்போது வரை இவரை திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பே வீட்டை அழகுபடுத்துவதற்காக கேரி அதிக பணத்தை செலவிடுகிறார் என்று போரிஸ் ஜான்சன் குறை கூறியிருக்கிறார்.எனினும் இதற்காகவே ஆயிரக்கணக்கில் கேரி செலவிடுவதாக ஒரு கூட்டத்தில் அவரே கூறியிருக்கிறார்.
மேலும் கேரி அமைச்சர் ஒருவரிடம் தங்கள் வீட்டின் சுவர்களில் வால்பேப்பர் ஒட்டுவதற்காக தங்கநிற வால்பேப்பர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன் தொகையை கேட்டு தான் அதிர்ந்துவிட்டதாக அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் தன் காதலி வீட்டை அழகுபடுத்த செலவிடும் தொகைக்காகவே தனியாக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.