தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களையும் கூறிக்கொண்டும், அதற்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து சசிகலாவின் வருகையால் அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பு அவ்வபோது நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்பி கனிமொழியிடம் மத போதகர் ஒருவர் பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் ஆவி திமுக தலைவர் மு க ஸ்டாலின் மீது இறங்கி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களில் துடிப்புடன் இயங்கும் இந்த மூன்று பேரின் ஆவிகள் தான் காரணம் எனவும் அந்த மத போதகர் தெரிவித்துள்ளார்.