பிரிட்டனில் முதன் முறையாக ஒரு டிஜிட்டல் ஓவியம் 69.3 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருக்கும் christie’s என்ற ஏல நிறுவனம் ஏலம் நடத்தியுள்ளது. இதில் Non Fungible Token (NFT) என்ற வடிவத்தில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஓவியம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த ஓவியம் 6 கோடியே 91 லட்சத்து 46 ஆயிரத்து 750 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. அதாவது உண்மையில் கையால் தொட்டு உணர முடியாத இந்த டிஜிட்டல் கலைப்படைப்பு இவ்வளவு தொகை ஏலத்திற்கு வாங்கப்பட்டது இதுதான் முதல் முறை.
மேலும் கிரிப்டோகரென்ஸி மூலம் வாங்கப்பட்ட முதல் கலை படைப்பும் இதுதான் என்று தெரியவந்துள்ளது. இந்த டிஜிட்டல் கலைப்படைப்பு சுமார் பதிமூன்று வருடங்களாக 5000 வித்தியாசமான வண்ணங்களில் Collage செய்யப்பட்டதால், இதற்கு Everydays- The first 5000 Days என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
Beeple என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அமெரிக்க படைப்பாளியான Mike winkelmann என்பவர் தான் இந்த டிஜிட்டல் ஓவியத்தை படைத்துள்ளார். இந்த ஓவியமானது Metapurse நிறுவனர் Metakovan என்பவரால் தான் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அடுத்த விற்பனை ஒரு பில்லியன் டாலர் என்று கூறப்பட்டுள்ளது.