Categories
தேசிய செய்திகள்

ஆத்தி இது என்ன புதுசா இருக்கு?…. மாயமான 8 வீடுகள்…. தேடும் பணியில் அதிகாரிகள்….!!!!

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சட்னா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு  இடத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டிய வீடுகளை கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய பிரதேச முதலமைச்சரும் காணொலி  காட்சி  வாயிலாக பயனாளர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் கட்டிய 8 வீடுகளை காணவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்த வீடுகள் கடந்த 2017 -18- ஆம் ஆண்டில் காணாமல் போனது என்று கூறப்படுகிறது. அதாவது இந்த இடத்தில் வீடுகள் கட்டப்படவில்லை. ஆனால் வெறும் காகிதத்தில் மட்டும் வீடுகள் கட்டப்பட்டதாக கணக்குகள் காட்டப்பட்டுள்ளது.

தற்போது வீடுகள் காணாமல் போனதால் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டவர்களின் பெயர்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்  கட்டப்பட்ட வீடுகள் எல்லாம் இருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் ஒரு கிராமத்தில் இருந்து வெளியேறியவர்கள் பெயரில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதனை மோசடி செய்திருப்பதும், இது வெளியே தெரியாது என்று அதிகாரிகள் நினைத்திருந்த நேரத்தில் ஒருவர் தனது பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு  அதில் பணம் வரவு மற்றும் செலவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து 8 வீடுகள் காணாமல் போன சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Categories

Tech |