Categories
சினிமா தமிழ் சினிமா

ஆத்தி….! முரட்டு ரசிகையா இருப்பாங்க போல…. ரஜினிய டிவியில பாத்ததுக்கே ஆரத்தி எடுக்குறாங்க…..!!!

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகை ஒருவர் தலைவர் 169 பற்றிய அறிவிப்பை டிவியில் பார்த்து வழிபாடு செய்யும் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 169 பற்றியஅறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டுள்ளார் ரஜினி காந்த். தற்போது இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தலைவர் 169 படத்திற்கான புரோமோவை  பார்த்ததும் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் தங்களது  மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் ரசிகை ஒருவர் இந்த புரோமோவை டிவியில் பார்த்ததும் டிவிகே ஊதுபத்தியை காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் 40 வயது  மதிக்கத்தக்க அந்த பெண் ரஜினிகாந்தை டிவியில் பார்த்து வழிபாடு செய்யும் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |