Categories
சினிமா தமிழ் சினிமா

ஆந்தாலஜி ‘நவரசா’… திடீரென விலகிய இயக்குனர் ஹலிதா ஷமீம்… என்ன காரணம் தெரியுமா?…!!!

ஆந்தாலஜி படமான ‘நவரசா’ படத்திலிருந்து இயக்குனர் ஹலிதா சமீம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்த்ராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். இந்த படம் கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் எடுக்கப்படுகிறது. நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தை கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், பிஜாய் நம்பியார், பொன்ராம், கே.வி.ஆனந்த், ஹலிதா சமீம், ரதீந்திரன் பிரசாத், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர்.

Halitha Shameem Wiki, Biography, Age, Movies, Images & More - News Bugz

இந்நிலையில் இயக்குனர் ஹலிதா ஷமீம் இந்த படத்திலிருந்து விலகியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது . இவருக்கு பதிலாக இயக்குனர் சர்ஜூன் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் ஹலிதா ஷமீம் ‘ஏலே’ மற்றும் ‘மின்மினி’ ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் நவரசா படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது ‌. மேலும் ‘ஏலே’ மற்றும் ‘மின்மினி’ ஆகிய படங்களின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |