ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார். இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. புதிதாக பதவியேற்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்து அமைச்சர்களில் அனுபவம் வாய்ந்த பத்து பேரோடு புதிதாக 15 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அந்தவகையில் நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா உள்ளிட்ட 14 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது . இந்த பதவி பிரமாணத்தை ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் செய்து வைத்தார். இந்த விழாவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2004 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி பெற்று இரண்டு முறை எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.